வணிகம்

சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் காலாண்டு லாபம் ரூ.22.23 கோடி

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.22.23 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

DIN

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.22.23 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.22.23 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11.09 கோடியாக இருந்தது.

மேலும், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.58.55 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் அது ரூ.16.23 கோடியாக இருந்தது.

இந்திய வாகனத் துறை மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT