வணிகம்

ரூ.5,500 கோடி நிதி திரட்டும் ஹெச்டிஎஃப்சி

கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,500 கோடி வரை நிதி திரட்ட ஹெச்டிஎஃப்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

DIN

கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,500 கோடி வரை நிதி திரட்ட ஹெச்டிஎஃப்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது: பாதுகாப்பான, திரும்பப் பெறக் கூடிய, பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) வெளியிடுவதன் மூலம் மூலதன நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ.4,000 கோடி மதிப்பிலான அந்தக் கடன் பத்திரங்களை கூடுதலாக ரூ.1,500 வரையிலான தொகைக்கு பதிவு செய்யும் வாய்ப்புடன் நிறுவனம் வெளியிடுகிறது.

நிறுவனத்தின் நீண்ட காலத் தேவைகளுக்கான மூலதனத்தைப் பெறுவதே இந்த கடன் பத்திர வெளியீட்டின் நோக்கமாகும்.

இந்தக் கடன் பத்திரங்களை வாங்குவதற்கான பதிவு வியாழக்கிழமை (நவ. 17) முதல் தொடங்கி, அதே நாளில் நிறைவடைகிறது. அந்தப் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி அளிக்கப்படும். அவற்றின் பருவகாலம் 3 ஆண்டுகளாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன் எனப்படும் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்துடன், அதன் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி விரைவில் இணைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளியில் ஆசிரியா் தின விழா

அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT