வணிகம்

வாழ்நாள் உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிவடைந்தது.

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்து வாழ்நாள் உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 74.25 புள்ளிகள் (0.41 சதவீதம்) உயர்ந்து 18,403.40-இல் முடிவடைந்தது. இருப்பினும், வர்த்தகத்தின் போது நிஃப்டி 18,427.95 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தாலும், பிற்பகலில் முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக நேர்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 249 புள்ளிகள் உயர்வு: சென்செக்ஸ் காலையில் 5.90 புள்ளிகள் கூடுதலுடன் 61,630.05-இல் தொடங்கி 61,436.90 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 61,955.96 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 248.84 புள்ளிகள் உயர்ந்து 61,872.99-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி பதிவு செய்த 61,795.04-ஐ செவ்வாய்க்கிழமை முறியடித்து நிலைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
 பவர் கிரிட் முன்னேற்றம்: பொதுத்துறை மின் நிறுவனமான பவர் கிரிட் 2.20 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 1.92 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, எம் அண்ட் எம், டைட்டன் உள்ளிட்டவை 1 முதல் 1.65 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், மாருதி, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 பஜாஜ் ஃபின் சர்வ் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ் 0.76 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஐடிசி, கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், சன் பார்மா, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 0.10 முதல் 0.60 சதவீதம் வரை குறைந்தன.
 சந்தை மதிப்பு சிறிதளவு உயர்வு: இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.285.17லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ. 1,089.41 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT