முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் புதிய உச்சம்! 63,000 புள்ளிகளைக் கடந்து சாதனை

அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.16 சதவிகிதமும், பவர் கிரிட் 2.14 சதவிகிதமும், எச்யுஎல் 1.78 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.55 சதவிகிதமும் உயர்வுடன் காண

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:59 AM
கோப்புப் படம்
பகிர்:

இந்திய பங்குச்சந்தை வணிகம் புதன்கிழமை இன்று (நவ.30) ஏற்றத்துடன் நிறைவடைந்தது. முதல்முறையாக சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 417.81   புள்ளிகள் உயர்ந்து 63,099.65 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.67 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140.30 புள்ளிகள் சரிந்து 18,758.35 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.75 சதவிகிதம் உயர்வாகும். 

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. 9 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 

அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.16 சதவிகிதமும், பவர் கிரிட் 2.14 சதவிகிதமும், எச்யுஎல் 1.78 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.55 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments