வணிகம்

பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. 

DIN

வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 702.02  புள்ளிகள் உயர்ந்து 57,505.60 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.18 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 229 புள்ளிகள் உயர்ந்து 17,085.65 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.21 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 29 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக எச்டிஎஃப்சி பங்குகள் 2.16 சதவிகிதம் சரிந்தன. அதனைத் தொடர்ந்து ஏசியன் பெயின்ட்ஸ் 2.08 சதவிகிதமும், எச்யூஎல் 2.05 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 1.87 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன. 

பவர் கிரிட் நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே நேர்மறையாக ஏற்றத்தில் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT