முகப்பு
வணிகம்

8.4% வட்டிக்கு வீட்டுக் கடன்: ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ அறிவிப்பு

 கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி ஆகியவை பண்டிகைக் கால சிறப்பு சலுகையாக 8.40 சதவீதம் என்ற குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் அளிக்க முன்வந்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

 கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி ஆகியவை பண்டிகைக் கால சிறப்பு சலுகையாக 8.40 சதவீதம் என்ற குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் அளிக்க முன்வந்துள்ளன.

இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய வீட்டுக் கடன் சந்தையில் முதல்முறையாக எஸ்பிஐ அங்கீகரித்துள்ள வீட்டுக் கடனின் மதிப்பு ரூ. 6 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த நிலையில், பண்டிகைக் கால சிறப்பு சலுகையாக 0.25 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்ட வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 0.20 சதவீதம் வரை குறைக்கப்பட்ட சிறப்பு வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் அளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பண்டிகைக் கால சிறப்பு சலுகை அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நிறுவனத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் மூலம், எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி-யிலிருந்து குறைந்தபட்சம் 8.40 சதவீதத்திலிருந்து வீட்டுக் கடன்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.