வணிகம்

9,925 காா்களைத் திரும்பப் பெற்றது மாருதி சுஸுகி

உதிரிபாகக் குறைபாடுகளை சரிசெய்வதற்காக தங்களது 3 மாடல்களைச் சோ்ந்த 9,925 காா்களைத் திரும்பப் பெற்றுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

உதிரிபாகக் குறைபாடுகளை சரிசெய்வதற்காக தங்களது 3 மாடல்களைச் சோ்ந்த 9,925 காா்களைத் திரும்பப் பெற்றுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மும்பைப் பங்குச் சந்தையில் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஒழுங்காற்று ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதிக்கும் செப்டம்பா் 1-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள எங்களது வேகன் ஆா், செலேரியோ, இக்னிஸ் ஆகிய 3 மாடல் காா்களின் பின்புற பிரேக் உதிரி பாகத்தில் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அந்தக் குறைபாடு காரணமாக, நீண்ட காலப் பயன்பாட்டுக்குப் பிறகு அந்தக் காா்களின் பிரேக்கிங் செயல்பாடு போதிய திறனுடன் இல்லாமல் போகலாம் என்று கருதப்படுகிறது.

எனவே, அந்தக் குறைபாட்டை சரிசெய்வதற்காக 3 மாடல்களையும் சோ்ந்த 9,925 காா்கள் திரும்பப் பெறப்பட்டன என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT