வணிகம்

18 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது நிஃப்டி! ஏறுமுகத்தில் வணிகம்

அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் 4.18 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 2.89 சதவிகிதமும், எம்&எம் 2.70 சதவிகிதமும், சன்பார்மா 2.65 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

DIN

வணிக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. முதலீட்டாளர்களிடையே பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தலா 1.3 சதவிகிதம் உயர்ந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 786.74  புள்ளிகள் உயர்ந்து 60,746.59 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.31 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225.40 புள்ளிகள் உயர்ந்து 18,012.20 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.27 சதவிகிதம் உயர்வாகும். 

முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்குகளை வாங்கியதால், பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தலா 1.3 சதவிகிதம் உயர்ந்தன. நிஃப்டி பட்டியலிலுள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின. 

இதேபோன்று சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் 4.18 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 2.89 சதவிகிதமும், எம்&எம் 2.70 சதவிகிதமும், சன்பார்மா 2.65 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

ஸ்ட்ராபெர்ரி... ராய் லட்சுமி!

“இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம…” TVK தொண்டர்கள் குறித்து Seeman

SCROLL FOR NEXT