கோப்புப் படம் 
வணிகம்

இன்ஸ்டாகிராம் ஹேக்! தகுந்த நேரத்தில் உதவிய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு

இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதைக் கண்டறிந்த மாணவனுக்கு ரூ.35 லட்சம் பரிசு வழங்கி இன்ஸ்டாகிராம் ஊக்கப்படுத்தியுள்ளது. 

DIN


இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதைக் கண்டறிந்த மாணவனுக்கு ரூ.35 லட்சம் பரிசு வழங்கி இன்ஸ்டாகிராம் ஊக்கப்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு தலைப்பிடும் வழியில் குளறுபடிகள் (Bug) இருந்ததைக் கண்டறிந்து கூறியதால், இன்ஸ்டாகிராம் நிறுவனம் அந்த மாணவனைப் பாராட்டியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை அம்மாணவர் காத்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவர் நீரஜ் சர்மா. இவர் இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் ரீல்ஸ் விடியோக்களின் தலைப்புகளை மாற்றுவதில் குளறுபடி (Bug) இருப்பதைக் கண்டறிந்தார்.

இதனை இன்ஸ்டாகிராமுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார். இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ நிறுவனமான முகநூல் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மாணவனின் புகார் குறித்து மூன்று நாள்களுக்குப் பிறகு பதில் அளித்தனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் குளறுபடி குறித்து ஆதார விடியோவை அனுப்புமாறு கோரினர். இதனைத் தொடர்ந்து 5 நிமிடங்களில் இன்ஸ்டாகிராம் விடியோவின் தலைப்பை மாற்றிய விடியோவை முகநூல் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் தவறு இருப்பதை முகநூல் நிறுவன மென்பொறியாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் விடியோ பதிவேற்றத்தில் இருந்த தவறை சுட்டிக்காட்டிய மாணவனை பாராட்டும் வகையில் முகநூல் நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சம் பரிசாக வழங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

நித்ய கன்னி... மனு பாக்கர்!

SCROLL FOR NEXT