வணிகம்

ஒரு லட்சம் எக்ஸ்யூவி 700 கார்களை திரும்ப பெற மஹிந்திரா முடிவு!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வாகனமான எக்ஸ்யூவி 700 காரின் 1 லட்சம் யூனிட்டுகளை ஒயரிங் பிரச்னையால் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

DIN

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வாகனமான எக்ஸ்யூவி 700 காரின் 1 லட்சம் யூனிட்டுகளை ஒயரிங் பிரச்னையால் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

ஜூன் 08 முதல் ஜூன் 28, 2023 வரை தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி 700-இன் 1,08,306 யூனிட்டுகளின் எஞ்சின் பேயில் வயரிங் சிராய்ப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதே போல் பிப்ரவரி 16 முதல் ஜூன் 5, 2023 வரை தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி 400 வாகனங்களின் 3,560 யூனிட்டுகள் பிரேக் பொட்டன்ஷியோமீட்டரின் பயனற்ற ஸ்பிரிங் ரிட்டர்ன் செயல்பாட்டிற்காக ஆய்வு செய்யப்படும் என்று மஹிந்திரா தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.

ஆய்வு மற்றும் அடுத்தடுத்த திருத்தங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக மேற்கொள்ளப்படும் அல்லது தனித்தனியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

வாகன ரீகால் தொடர்பான தன்னார்வ நெறிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

SCROLL FOR NEXT