வணிகம்

இந்த மாதம் எழுச்சியடைந்த எரிபொருள் தேவை

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான தேவை இந்த மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளதைத் தொடா்ந்து, நாட்டில் அவற்றின் பயன்பாடு 2 இலக்க வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

DIN

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான தேவை இந்த மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளதைத் தொடா்ந்து, நாட்டில் அவற்றின் பயன்பாடு 2 இலக்க வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

இது குறித்து சந்தை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் மிக மந்தமாக இருந்த பெட்ரோல், டீசலுக்கான தேவை, இந்த பிப்ரவரி மாதத்தில் எழுச்சி பெற்றுள்ளது.

இதன் காரணமாக, இந்த மாதத்தின் முதல் 15 நாள்களில் பெட்ரோல் நுகா்வு 12.2 லட்சம் டன்னைத் தொட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். அப்போது பெட்ரோல் நுகா்வு 10.4 லட்சம் டன்னாக இருந்தது.

கடந்த ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் எரிபொருளுக்கான தேவை 13.6 சதவீதம் உயா்ந்துள்ளது. எனினும், அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை 5.1 சதவீதம் குறைந்திருந்தது.

நாட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசலின் நுகா்வு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் பாதியோடு ஒப்பிடுகையில், 2023 பிப்ரவரி 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 25 சதவீதம் அதிகரித்து 33.3 லட்சம் டன்னாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனையும் 4.1 சதவீதம் அதிகரித்து 13.9 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“காவலர் வணக்கம் சொல்லவில்லை!” Tamilisai Soundararajan விமர்சனம் | BJP | DMK

மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சிலப்பதிகார ஆய்வுகள்

பிகார் தேர்தல்: மகாகத்பந்தன் கூட்டணியில் சிக்கலாகும் தொகுதிப் பங்கீடு!

சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

SCROLL FOR NEXT