முகப்பு
வணிகம்

இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை! ஐடி நிறுவன பங்குகள் விலை சரிந்தது!!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் தொடங்கியுள்ளன. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
கோப்புப்படம்
பகிர்:

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் தொடங்கியுள்ளன. 

நேற்று(வியாழக்கிழமை) 61,319.51 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. 

இன்று காலை 11 மணி நிலவரப்படி, 161.06 புள்ளிகள் குறைந்து 61,158.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 51.05 புள்ளிகள் குறைந்து 17,984.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. 

ஹெச்சிஎல் டெக், விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் பங்குகளும் நெஸ்லே, டெக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் பேங்க், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →