முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது! அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) 60,672.72 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. 

இன்று காலை 11.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 592.46 புள்ளிகள் குறைந்து 60,080.26 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181.35 புள்ளிகள் குறைந்து 17,645.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பாரதி ஏர்டெல், மாருதி சுசுகி, ஐடிசி தவிர இதர நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. ஐடி நிறுவனங்களின் பங்குகள் இழப்பிலிருந்து சற்று மீண்டன. எனினும் 0.79 சதவீதம் சரிந்தது. பிஎஸ்யு வங்கி, ரியல் எஸ்டேட் அதிகம் சரிந்தன. 

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 6.83 சதவிகிதம் சரிந்ததால், அதானி போர்ட்ஸ் 3.29 சதவிகிதம் சரிந்தது. அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை 5 சதவீதம் குறைந்தன. 

முழு கட்டுரையைப் படிக்க →