வணிகம்

நேரடி, மறைமுக வரி செலுத்த சிட்டி யூனியன் வங்கி வசதி

வருமான வரித் துறையின் புதிய இணையதளத்தில் சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கிக் கணக்கு மூலமாகவே நேரடி மற்றும் மறைமுக வரியை இனி செலுத்தலாம் என சிட்டி யூனியன் வங்கி அறிவித்துள்ளது.

DIN

வருமான வரித் துறையின் புதிய இணையதளத்தில் சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கிக் கணக்கு மூலமாகவே நேரடி மற்றும் மறைமுக வரியை இனி செலுத்தலாம் என சிட்டி யூனியன் வங்கி அறிவித்துள்ளது.

வருமான வரித் தாக்கல் செய்ய வருமான வரித் துறையால் கடந்த ஜூலை மாதத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘டி.ஐ.என் 2.0’ இணைய முகப்புடன் சிட்டி யூனியன் வங்கியின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, வருமான வரித் துறையின் புதிய இணையதளத்தில் சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளா்கள் தனி நபா்களோ அல்லது நிறுவனங்களோ தங்கள் வங்கிக் கணக்கு மூலமாகவே நேரடி மற்றும் மறைமுக வரியை இனி செலுத்தலாம் என சிட்டி யூனியன் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) உள்பட மறைமுக வரிகளைச் செலுத்தும் வசதி கடந்த நவம்பா் மாதம் 25-ஆம் தேதியே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இனி வாடிக்கையாளா்கள் நேரடி வரிகளையும் செலுத்தலாம்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம், வரி வசூலிக்கும் பங்குதாரராக செயல்பட சிட்டி யூனியன் வங்கி அங்கீகாரம் பெற்றது. அதைத் தொடா்ந்து, வாடிக்கையாளா்களின் நீண்டகால கோரிக்கையான இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளா்கள் தங்கள் வரிகளை வங்கிக் கிளைகள், இணைய வங்கி சேவை அல்லது கைப்பேசி செயலி மூலமாக செலுத்தலாம்.

தமிழகத்தின் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி 1904-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 750-க்கும் மேலான கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT