வணிகம்

பயனர் பெயர்களை விற்கத் திட்டமிடும் டிவிட்டர்!

வருவாயைப் பெருக்கும் வகையில், பயனர் பெயர்களை விற்பனை செய்ய டிவிட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

DIN

வருவாயைப் பெருக்கும் வகையில், பயனர் பெயர்களை விற்பனை செய்ய டிவிட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

டிவிட்டரில் போலி கணக்குகளை முடக்கும் பணிகளில் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வரும் நிலையில், பயனர் பெயர்களை ஏலம் விடும் முடிவுக்கு டிவிட்டர் நிறுவனம் வந்துள்ளது. 

டிவிட்டர் நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் நடவடிக்கைகள் டிவிட்டர் பயனர்கள் மத்தியில் அதிருப்தியையும் விமர்சனங்களையும் உருவாக்கிவருகிறது.

எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் கடந்த சில மாதங்களாக சரிவைச் சந்தித்து வருவதால், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்க் தற்போது 6வது இடத்துக்கு சரிந்துள்ளார். இதன் விளைவாக அதிக சொத்துகளை விரைவாக இழந்த செல்வந்தர் என்று, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார். 

டிவிட்டர் நிறுவனத்தின் வருவாயை பெருக்க புளூ டிக் விற்பனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.  அந்தவகையில் தற்போது டிவிட்டர் பயனர்களின் பெயர்களையும் ஏலம் மூலம் விற்பனை செய்து, நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க ஊழியர்களிடையே பேச்சு நடந்து வருகிறது.

இந்த முடிவு அமல்படுத்தப்பட்டால், @ எழுத்துருவுக்கு அடுத்து வரும் பெயர்களை பயனர்கள் நிர்ணயம் செய்துகொள்ள இனி டிவிட்டர் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். 

இதன்மூலம், தற்போது டிவிட்டரைப் பயன்படுத்தி வரும் பயனர்களின் பெயர்களும் பகுதியளவு அல்லது முழுமையாக பாதிக்கப்படலாம். டிவிட்டரில் செயல்படாமல் இருந்த கணக்குகளை நீக்கியதன் மூலம் 150 கோடி பயனர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பிரபலமான குறிப்பிட்ட பயனர்கள், நிறுவனங்கள் பெயர்களுக்கு கூடுதல் மதிப்பு விதிக்கப்படவுள்ளது. 

டிவிட்டர் பயனர்களின் பெயர்களை ஏலம் விடும் திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த வேண்டும் என டிவிட்டர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT