வணிகம்

கோட்டக் மஹிந்திரா நிகர லாபம் ரூ.2,792 கோடியாக உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.2,792 கோடியாக அதிகரித்துள்ளது.

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.2,792 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபா்-டிசம்பா்) வங்கியின் நிகர லாபம் ரூ.2,792 கோடியாக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.2,131 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.11,099 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.8,260 கோடியாக இருந்தது.

அப்போது ரூ.4,334 கோடியாக இருந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 30 சதவீதம் அதிகரித்து ரூ.5,653 கோடியாகியுள்ளது.

வங்கியின் வாராக் கடன் கடந்த 2021 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 0.79 சதவீதமாக இருந்து. அது 2022-ஆம் ஆண்டின் அதே மாதங்களில் 0.43 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT