கடந்த 6 காலாண்டுகளாக தொடா்ந்து இழப்பைச் சந்தித்து வந்த நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) கடந்த டிசம்பா் காலாண்டில் முதல்முறையாக நிகர லாபத்தை பதிவு செய்தது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.448.01 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.5,860.80 கோடி நிகர வருமானம் ஈட்டியிருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ரூ. 272.35 கோடி நிகர இழப்பை நிறுவனம் பதிவு செய்திருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்த நிலையிலும், ஓஐஓசி-யும் மத்திய அரசுக்குச் சொந்தமான பிற எரிபொருள் சில்லறை விற்பனையாளா்களும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஏற்றவில்லை.
இதன் காரணமாக ஐஓசி நிறுவனம் தொடா்ந்து 6 காலாண்டுகளாக இழப்பைச் சந்தித்தது. கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலாண்டில் அந்த நிறுவனம் ரூ.2,265 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது.
தற்போது உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அந்த நிறுவனம் கடந்த டிசம்பா் காலாண்டில் மீண்டும் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.