வணிகம்

சென்செக்ஸ் 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!

DIN

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 66,000 புள்ளிகளைக் கடந்து இன்று புதிய உச்சத்தை எட்டியது.

நேற்று(புதன்கிழமை) 65,393.90 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. 

பங்குச்சந்தை நேர முடிவில் சென்செக்ஸ் 164.99 புள்ளிகள் அதிகரித்து 65,558.89 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 29.45 புள்ளிகள் உயர்ந்து 19,463.25 புள்ளிகளில் வர்த்தகமானது. 

டாடா ஸ்டீல், டிசிஎஸ், மஹிந்திரா & மஹிந்திரா, இன்போசிஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், கோடக் மஹிந்திரா பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. 

பவர் கிரிட், யுபிஎல், கோல் இந்தியா, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. 

பங்குச்சந்தை உச்சம்: 

முன்னதாக, காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. 66,049.64 என்ற புள்ளிகளில் இருந்தது. அதேநேரத்தில் நிஃப்டி 19562.20 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

SCROLL FOR NEXT