வணிகம்

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

DIN

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

நேற்று(வியாழக்கிழமை) 65,558.89 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 65,775.49 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

இன்று காலை 11.37 நிலவரப்படி சென்செக்ஸ் 211.18 புள்ளிகள் அதிகரித்து 65,770.07 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 62.65 புள்ளிகள் உயர்ந்து 19,476.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

ஹெச்சிஎல், எல்&டி, இன்போஸிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 

எம் & எம், பவர் கிரிட், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 

முன்னதாக, நேற்று சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT