ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு
இந்திய பங்குச்சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
நேற்று (செவ்வாய்கிழமை) 66,355.71 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 66,434.72 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், 351.49 புள்ளிகள் அதிகரித்து 66,707.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 97.70 புள்ளிகள் உயர்ந்து 19,778.30 புள்ளிகளில் நிறைவுற்றது.
எல் & டி, ஐடிசி, ரிலையன்ஸ், சன் பார்மா, கோட்டாக் பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்டவற்றின் பங்குகள் இன்று உயர்ந்தன.
எம் & எம், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆக. 8 வரை நீட்டிப்பு!