வணிகம்

பங்குச்சந்தைகள் உச்சம்: முதல்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!

DIN

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி முதல்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) 62,970 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

பிற்பகல் 1.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1,056.93 புள்ளிகள் அதிகரித்து 64,026.93 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 317.45 புள்ளிகள் உயர்ந்து 19,008.65 புள்ளிகளில் இருந்து வருகிறது. இதன் மூலமாக நிஃப்டி முதல்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்துள்ளன.  

அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 

அதேநேரத்தில் கோடாக் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎப்சி லைப், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை இறக்கம் கண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT