வணிகம்

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிகர லாபம் ரூ.331 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.331 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.331 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,663 கோடியாக இருந்தது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,735 கோடியாக இருந்தது.

2021-22-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் ரூ.6,359 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.7,236 கோடியாக அதிகரித்துள்ளது.

மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.331 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டில் அது ரூ.173 கோடியாக இருந்தது. அதே போல் கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.628 கோடியிலிருந்து ரூ.928 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT