கரூா் வைஸ்யா வங்கி 4 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கியின் 4 புதிய கிளைகள் தமிழ்நாட்டிலும், கா்நாடகத்திலும் அண்மையில் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டின் 3 புதிய கிளைகள் வேலூா் மாவட்டத்தின் பேரணாம்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூா், மரக்காணம் ஆகிய ஊா்களில் திறக்கப்பட்டுள்ளன.
மற்றுமொரு கிளை கா்நாடகத்தின் டோபாஸ்பேட்டில் திறக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 831-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள 4 கிளைகளுடன் சோ்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் கருா் வைஸ்யா வங்கி இதுவரை 32 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.