வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளன. 

DIN

நேற்று(வியாழக்கிழமை) பங்குச்சந்தை சரிவைக் கண்ட நிலையில்,  வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.

வியாழக்கிழமை 64,831.41 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 64,855.51 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 555.75 புள்ளிகள் அதிகரித்து 65,387.16 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181.50 புள்ளிகள் உயர்ந்து 19,435.30 புள்ளிகளில் முடிந்தது.

பவர் கிரிட், என்டிபிசி, ஐடிசி, மாருதி, டாடா ஸ்டீல், விப்ரோ உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன.

சன் பார்மா, எல்&டி, நெஸ்ட்லேண்ட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே சரிவை சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT