ரிலையன்ஸ் பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் மேலாக வீழ்ச்சி!
ப்ளூ சிப் நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.
புதுதில்லி: ப்ளூ சிப் நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.
பங்குச் சந்தையில் ஏற்பட்ட பலவீனமான போக்கைத் தொடர்ந்து, இன்று மும்பை பங்குச் சந்தையில் 3.46 சதவிகிதம் குறைந்து ரூ.2,894.70 ஆக நிலைபெற்றது.
வர்த்தக நேர முடிவில் 4.42% குறைந்து ரூ.2,865.80 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் 3.46% குறைந்து ரூ.2,894.65 ஆக உள்ளது.
Advertisement
Advertisement
டாப் 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் 2,222.55 புள்ளிகள் சரிந்து 78,759.40 புள்ளிகளில் நிலைபெற்றது. பகல் நேர வர்த்தகத்தில் இது 2,686.09 புள்ளிகள் சரிந்து 78,295.86 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 662.10 புள்ளிகள் சரிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக, குறைந்தபட்சமான 24,055.60 புள்ளிகளுடன் நிறைவுபெற்றது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.70,195.32 கோடியாக குறைந்து ரூ.19,58,500.25 கோடி ரூபாயாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.