மும்பை: ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஒன்பதாவது நிதி கொள்கை கூட்டத்தில் வட்டி விகிகத்தின் நிலைப்பாட்டை மாற்றாமல் வைத்திருப்பதை அடுத்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 1 காசு குறைந்து ரூ.83.96ஆக முடிந்தது.
பலவீனமான உள்நாட்டு சந்தைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாய் கடும் அழுத்தத்தில் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அமெரிக்க டாலர் குறியீட்டில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய ரூபாயின் சரிவு தடுக்கப்பட்டது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூ.83.94 ஆக வர்த்தகம் தொடங்கிய நிலையில், இது இன்றைய வர்த்தகத்தின் குறைந்தபட்சமாக ரூ.83.97 என்ற நிலையும், அதிகபட்சமாக ரூ.83.93 என்ற நிலையில் முடிந்தது.
இறுதியாக அமெரிக்க டாலருக்கு எதிராக 83.96 ஆக நிலைபெற்றது. இது முந்தைய முடிவில் இருந்து 1 பைசா குறைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.