சித்தரிக்கப்பட்டது | தொழில்துறை 
வணிகம்

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி ஜூன் மாதத்தில் 4.2 சதவிகிதம் உயர்வு!

தொழில்துறை உற்பத்தி குறியீடு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தை விட 4.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று புள்ளியியல் அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

DIN

ஷில்லாங்: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு இந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட முந்தைய ஆண்டு ஜூன் மாதம் 4.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சார துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் ஜூன் 2023ஐ விட ஜூன் 2024ல் முறையே 10.3 சதவிகிதம், 2.6 சதவிகிதம் மற்றும் 8.6 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது.

ஜூன் 2024ல் தொழில்துறை உற்பத்திக் குறியீடு வளர்ச்சி விகிதம் 4.9 சதவிகிதமும், மின் உபகரணங்கள் 28.4 சதவிகிதமும், மோட்டார் வாகனங்கள் உற்பத்தி 4.1 சதவிகிதமாக உள்ளது.

ஜூன் 2023ஐ விட, ஜூன் 2024ல் பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி தொழில்துறை உற்பத்தி குறியீடு தொடர்புடைய வளர்ச்சி விகிதங்கள் முதன்மை பொருட்களில் 6.3 சதவிகிதமும், இடைநிலை பொருட்களில் 3.1 சதவிதமாக ஆக உள்ளது.

குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஆகிய நுகர்வோர் சாதனங்களின் உற்பத்தி 8.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாடு குறித்த தரவு மூலம் தெரியவந்துள்ளது. இது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் தேவை அதிகரிப்பதற்கான சாதகமான அறிகுறியாகும்.

இருப்பினும், பொருட்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை உள்ளடக்கிய மூலதனப் பொருட்களின் உற்பத்தி 2.4 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. இந்த மாதத்தில் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியில் 4.4 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூன் 2023ல் தொழில்துறை உற்பத்தி குறியீடு வளர்ச்சி விகிதம் 4.0 சதவிகிதமாக இருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5 சதவிகிதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி குறியீடு இந்த ஆண்டு மே மாதத்தில் 5.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT