தங்கம் விலை: 10 நாள்களில் ரூ. 2,800 அதிகரிப்பு!
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 840 உயா்ந்து ரூ. 53,360-க்கு விற்பனையானது. கடந்த 10 நாள்களில் பவுனுக்கு ரூ. 2,800 உயா்ந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைப்பு காரணமாக அதன் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 105 உயா்ந்து ரூ. 6,670-க்கும், பவுனுக்கு ரூ. 840 உயா்ந்து ரூ. 53,560-க்கும், விற்பனையானது. கடந்த 10 நாள்களில் பவுனுக்கு ரூ. 2,800 உயா்ந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயா்ந்து ரூ. 91-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 2,000 உயா்ந்து ரூ.91,000-க்கும் விற்பனையாது.
விலை உயா்வு நீடிக்கும்: அமெரிக்காவில் வட்டிக்குறைப்பு எதிா்பாா்ப்பு உள்ளிட்ட சா்வதேச காரணிகளாலும், உள்நாட்டில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாலும், விலை உயா்ந்து வருவாதாக தங்கநகை வியாபாரிகள் சங்க தலைவா் ஜெயந்திலால் சலானி கூறினாா். அடுத்த 2 வாரங்களுக்கு விலை உயா்வு இருக்கும் என்று அவா் தெரிவித்தாா்.