மும்பை : அமெரிக்க பங்குச் சந்தைகளின் ஏற்றம் மற்றும் அந்நிய நிதி முதலீடு வரவால் உந்தப்பட்ட முதலீட்டாளர்கள், ஐடி நிறுவன பங்குகளை வாங்கியதால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 1,361.41 புள்ளிகள் உயர்ந்து 82,317.74 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக நேர முடிவில் பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் ஆனது 809.53 புள்ளிகள் உயர்ந்து 81,765.86 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 240.95 புள்ளிகள் உயர்ந்து 24,708.40 புள்ளிகளாகவும் ல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், இன்போசிஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்த நிலையில் என்.டி.பி.சி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தது.
இதையும் படிக்க: விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59!
இன்போசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலா 3 சதவிகிதம் உயர்ந்தது. டைட்டன் 2.8 சதவிகிதம் உயர்ந்தது. பஜாஜ் பைனான்ஸ், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தலா 1.9 சதவிகிதம் வரை உயர்ந்தன. என்டிபிசி 0.5 சதவிகிதம் சரிந்தது. நிஃப்டி குறியீட்டில் உள்ள டாப் 50 பங்குகளில் 46 பங்குகள் ஏற்றத்திலும், 4 பங்குகள் சரிந்து வர்த்தகமானது.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி 2 சதவிகிதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், நிஃப்டி எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ துறை, தனியார் வங்கிகள் தலா 0.8 சதவிகிதமும், நிஃப்டி பேங்க், எஃப்எம்சிஜி, மெட்டல் மற்றும் பார்மா ஆகியவை தலா 0.7 சதவிகிதமும் வரை உயர்ந்தது. நிஃப்டி ரியாலிட்டி 0.2 சதவிகிதமும், நிஃப்டி பொதுத்துறை வங்கி தலா 0.1 சதவிகிதமும் சரிந்தது முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 2,144 பங்குகள் உயர்ந்தும், 1,821 பங்குகள் சரிந்தும், 118 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் ஷாங்காய் உயர்ந்து முடிந்த நிலையில், சியோல் மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.53 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.68 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.