கோப்புப் படம் 
வணிகம்

ஏற்றத்திற்கு பிறகு, மீண்டும் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 1.6 புள்ளிகள் சரிந்து 81,510 ஆகவும், நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 24,610-ஆகவும் நிலைபெற்றது.

DIN

மும்பை: வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளன்று, இந்திய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தது.

அதே வேளையில் ப்ளூ-சிப் பங்குகளான இன்ஃபோசிஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகளை காலை நேர வர்த்தகத்தில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கியதையடுத்து சற்றே உயர்ந்தது.

சற்று மந்தமான அமர்வுக்கு மத்தியிலும், இன்றைய வர்த்தகத்தில் துறை வாரியாக ஐடி பங்குகள் ஜொலித்தது. இன்போசிஸ், எல்டிஐ-மைண்ட்ட்ரீ மற்றும் விப்ரோ ஆகியவை சுமார் 1 சதவிகிதம் அதிகரித்து 45,377.75 என்ற சாதனை உச்சத்தை எட்டியது.

இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.6 புள்ளிகள் உயர்ந்து 81,510.05-ஆகவும், நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 24,610-ஆகவும் நிலைபெற்றது. இன்று 1,969 பங்குகள் உயர்ந்தும், 1,828 பங்குகள் சரிந்தும், 122 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.

இதையும் படிக்க: விலை உயரும் டாடா காா்கள்

சாதகமான உலகளாவிய சந்தை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் ஐடி-துறை பங்குகள் இன்று உயர்ந்தது.

துறை வாரியான செயல்திறன் அடிப்படையில், ஐடி-துறை தவிர, வங்கி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ரியால்டி துறைகள் 0.3 முதல் 1.5 சதவிகிதம் வரை லாபத்தைப் பதிவு செய்தன.

இதற்கு நேர்மாறாக, நிஃப்டி எனர்ஜி மற்றும் நிஃப்டி எண்ணெய் & எரிவாயு குறியீடு முறையே 0.6 சதவிகிதம் மற்றும் 0.3 சதவிகிதம் வரை சரிந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி தலா 1 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து, நிஃப்டி எண்ணெய் & எரிவாயு குறியீட்டை சரிய வைத்தது.

கிரீவ்ஸ் காட்டன் பங்குகள் சுமார் 18.5 சதவிகிதம் வரை இன்று உயர்ந்தது. முதலீட்டாளரான விஜய் கேடியா தனி ஒரு ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 12 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார். இது நிறுவனத்தின் 0.52 சதவிகிதம் பங்குகளாகும். அதே வேளையில் நவம்பரில் மொத்த பிரீமியம் வசூலில் ஆண்டுக்கு ஆண்டு 27 சதவிகித வீழ்ச்சியை எட்டிய நிலையில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பங்குகள் சுமார் 4 சதவிகிதம் வரை சரிந்தது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.29 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 71.93 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT