முகப்பு
வணிகம்

கடும் சரிவிலிருந்து சற்று மீண்ட ரூபாய் மதிப்பு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு காசு குறைந்து ரூ.84.84 காசுகளாக நிர்ணயம்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 12:33 PM
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு
பகிர்:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு காசு குறைந்து ரூ.84.84 காசுகளாக இன்று (டிச. 11) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் இதுவரை மட்டும் 0.4% வரை ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடும் சரிவு

வாரத்தின் முதல் வணிக நாளான திங்கள் கிழமை இதுவரை இல்லாதவகையில் சரிந்து ரூ. 84.86 காசுகளாக ரூபாய் மதிப்பு இருந்தது. இது அதிகபட்ச சரிவாகும். இரண்டாவது நாளான நேற்று ஒருகாசு உயர்ந்து ரூ. 84.85 காசுகளாக இருந்தது.

இன்று அதிகபட்ச சரிவிலிருந்து சற்று மேல் நோக்கியுள்ளது. எனினும் இன்றைய வணிகத்தை பொறுத்தவரை எந்தவித பெரிய மாற்றமின்றி (ரூ.84.84 காசுகளாக) ரூபாய் மதிப்பு முடிந்ததாகவே நிபுணர்களால் கருதப்படுகிறது.

இன்றைய வணிக நேர மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு ரூ. 84.86 காசுகளாக சரிந்தது.

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா புதிதாக பதவியேற்றதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் கொள்கைகளில் மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வணிக நேரத்தில் கடுமையாக சரிந்தது. எனினும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளால் வணிக நேர முடிவில் ஒரு காசு குறைந்து ரூ.84.84 காசுகளாக நிர்ணயமானது.

இதையும் படிக்க | சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு; ஐ.டி. மற்றும் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

முழு கட்டுரையைப் படிக்க →