முகப்பு
வணிகம்

2022க்குப் பிறகு கடும் சரிவில் பங்குச்சந்தை! ஏன்?

வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 20) பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகின.

Updated On : 20 டிசம்பர், 2024 at 12:08 PM
பகிர்:

வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 20) பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகின.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
79,335.48 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,176.45 புள்ளிகள் குறைந்து 78,041.59 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 364.20 புள்ளிகள் குறைந்து 23,587.50 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், நெஸ்லே, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஏற்றம் கண்டன. பெரும்பாலாக அனைத்து நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஒட்டுமொத்தமாக இந்த வாரத்தில் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வாரம் மட்டும் சென்செக்ஸ் 4,000 புள்ளிகள் சரிந்துள்ளது. கடந்த 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போது பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் ரூ. 19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணங்கள் என்ன?

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வங்கி, வட்டி விகிதக் குறைப்பை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இது செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய சந்தைகளில் எதிரொலிக்கிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்று வருகின்றனர். இன்று மட்டும் கடந்த 4 அமர்வுகளில் 12,000 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளது பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 85.03 ஆக உள்ளது .

மேலும், முதல் இரண்டு காலாண்டுகளில் பெரிதாக வளர்ச்சி கண்டிராத பெரிய நிறுவனங்கள் நடப்பு காலாண்டில் வருவாயினை மீட்க முயற்சித்து வருவதும் வங்கி, நிதி, ஐடி என பெரிய துறைகள் எதுவும் சரியாக வளர்ச்சி காணாததும் காரணங்களாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →