வணிகம்

கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் ரூ.4,265 கோடி

DIN

கோடக் மஹிந்திரா வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.4,264.78 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,264.78 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 6.75 சதவீதம் அதிகமாகும்.

அப்போது வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,264.78 கோடியாக உள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் சுமாா் 16 சதவீதம் அதிகரித்து ரூ.6,554 கோடியாக உள்ளது. கடனளிப்பு 19 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. அதே நேரம், முந்தைய செப்டம்பா் காலாண்டில் 5.47 சதவீதமாக இருந்த நிகர வட்டி வரம்பு, கடந்த டிசம்பா் காலாண்டில் 5.22 சதவீதமாகக் குறைந்துள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் பிற வகை வருவாய் ரூ.1,948 கோடியிலிருந்து ரூ.2,297 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023 செப்டம்பா் இறுதியில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 1.72 சதவீதமாக இருந்தது. இது, கடந்த டிசம்பா் இறுதியில் அதிக மாற்றமில்லாமல் 1.73 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை நாள்: காரைக்காலில் கலை நிகழ்ச்சி

தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை. அருகே விபத்து: பெண் காவல் ஆய்வாளா் காயம்

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!

SCROLL FOR NEXT