கோப்புப் படம் 
வணிகம்

உச்சம் தொட்டு சரிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

நேற்று புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்குச் சந்தையானது, இன்றைய நாளின் முடிவில் சரிவை சந்தித்தது.

DIN

நேற்று புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்குச் சந்தையானது, இன்றைய நாளின் (ஜூலை 2) வர்த்தகத்தின் முடிவில் சரிவை சந்தித்தது.

நேற்றையை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டிய நிலையில், 79,476 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

இன்று மேலும் 34.73 புள்ளிகள் சரிந்து 79,441.45 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.044% சரிவாகும்.

நேற்று புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ் இன்று காலை, 79,840 புள்ளிகளுன் தொடங்கியது. நாளின் பிற்பாதியில் 79,855 என்ற உச்சத்தை எட்டியது. இது நேற்றைய உச்சத்தை ( சென்செக்ஸ் 79,561) விட அதிகம். பின்னர் வர்த்தகத்தின் முடிவில் சரிவை சந்தித்து 79,476.1 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 24,123 புள்ளிகளாக நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.075 சதவீதம் சரிவாகும்.

17 நிறுவன பங்குகள் சரிவு

பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 13 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக எல்&டி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், எச்டிஎல் டெக், பவர் கிரிட், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, என்டிபிசி, அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

பட்டியலில் 17 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, கோட்டாக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT