புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை மே மாதத்தில், 2 சதவிகிதம் அதிகரித்து 76,766 யூனிட்களாக உள்ளது.
இது குறித்து டாடா மோட்டார்ஸ் ஒழுங்குமுறை ஆவணத்தில் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டு விற்பனை 73,448 என்ற எண்ணிக்கையிலிருந்து 2 சதவிகிதம் அதிகரித்து 75,173 யூனிட்களாக உள்ளது. அதே வேளையில், உள்நாட்டு சந்தையில் மின்சார வாகனங்கள் உள்பட பயணிகள் வாகனங்களின் விற்பனை 45,984 என்ற எண்ணிக்கையிலிருந்து 2 சதவிகிதம் அதிகரித்து 47,075 ஆனது.
மொத்த வர்த்தக வாகன விற்பனையும் 2023 மே மாதத்தில் 28,989 யூனிட்களிலிருந்து 2 சதவிகிதம் அதிகரித்து 29,691 யூனிட்களாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.