இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்ந்தது வர்த்தகமானது. இதில் நிலையற்ற போக்குகளை எதிர்கொண்டது சென்செக்ஸ்.
தொடர்ந்து தனியார் வங்கி பங்குகள் 6வது அமர்வாக சிறப்பாக செயல்பட்டதால் சென்செக்ஸை இது உயர்த்தியது. இந்த நிலையில் நிஃப்டி விரைவில் 23,800 புள்ளிகளைத் தொடும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்செக்ஸ் 0.18 சதவிகிதம் வரை உயர்ந்து 77,478.93 ஆகவும் நிஃப்டி +0.22 சதவிகிதம் உயர்ந்து 23,567.00 ஆக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 2,294 பங்குகள் ஏற்றத்திலும் 1,555 பங்குகள் சரிவிலும், 132 பங்குகள் எந்த வித பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்தன.
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் இன்று 0.9 சதவிகிதம் வரை உயர்ந்தது. பந்தன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் 6 சதவிகிதம் வரை உயர்ந்ததால் சென்செக்ஸை வலுவாக உயர்ந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில் கோடக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. சன் பார்மா, பவர் கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில், சியோல் எற்றத்திலும், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை நிலையற்ற போக்கில் முடிந்தது. ஜூன்டீன்த்தை (Juneteenth) முன்னிட்டு அமெரிக்க பங்குச் சந்தைகள் புதன்கிழமையன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7,908.36 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.64 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 85.07 டாலராக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.