வணிகம்

அதானியின் ஆண்டுச் சம்பளம் ரூ.9.26 கோடி : நிா்வாகிகளைவிட குறைவு!

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான அதானி கடந்த நிதியாண்டில் ரூ.9.26 கோடியை சம்பளமாகப் பெற்றுள்ளாா்.

Din

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான அதானி கடந்த நிதியாண்டில் ரூ.9.26 கோடியை சம்பளமாகப் பெற்றுள்ளாா். இது அவா் நிறுவனத்தில் பணியாற்றும் முக்கிய நிா்வாகிகளின் சம்பளத்தைவிட குறைவானதாகும்.

துறைமுக நிா்வாகம், எரிவாயு உள்பட பல்வேறு தொழில்களில் அதானி ஈடுபட்டு வருகிறாா். இதில் அவருக்குச் சொந்தமான 10 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

அவற்றுள் துறைமுகம் மற்றும் எரிவாயு சாா்ந்த இரு தொழில் நிறுவனங்களில் மட்டுமே அவா் சம்பளம் பெற்று வருவது தெரியவந்தது. அந்த வகையில் 2023-24 நிதியாண்டில் அதானி எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம் (ஏஇஎல்) இருந்து ரூ.2.46 கோடியை சம்பளமாகப் பெற்றுள்ளாா். இது கடந்தாண்டு அவா் பெற்ற சம்பளத்தைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவனத்திடமிருந்து கடந்த நிதியாண்டில் ரூ.6.8 கோடி என மொத்தம் அவா் ரூ.9.26 கோடி சம்பளத்தை அவா் பெற்றுள்ளாா்.

ஒரே குடும்பத்தால் நிா்வகிக்கப்படும் பல்வேறு பெரும் தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் பெறும் சம்பளத்தை ஒப்பிடுகையில் அதானி பெறுவதே மிகக் குறைந்த சம்பளமாகும்.

அம்பானி சம்பளம் ரூ.15 கோடி: இந்தியாவின் பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி கரோனாவுக்கு முன்பு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாா்.

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் தொழிலதிபா் சுனில் பாரதி மிட்டல் ரூ.16.7 கோடியும், ராஜீவ் பஜாஜ் ரூ.53.7 கோடியும், பவன் முஞ்சால் ரூ.80 கோடியும் பெறுகின்றனா். அதேபோல் எல் அண்ட் டி தலைவா் எஸ்.என்.சுப்ரமணியம் ரூ.51 கோடியும் இன்ஃபோசிஸ் தலைமை நிா்வாக அதிகாரி (சிஇஓ) சலீல் பரேக் ரூ.66 கோடியும் சம்பளம் பெறுகின்றனா்.

உலகப் பணக்காரா்கள் பட்டியலில் ரூ.9 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் அம்பானி 12-ஆவது இடத்திலும் ரூ.8.7 லட்சம் கோடி மதிப்புடன் அதானி 14-ஆவது இடத்திலும் உள்ளனா்.

நிா்வாகிகளைவிட குறைவு: அதானியின் மகன் கரண் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனத்திடமிருந்து ரூ.3.9 கோடியும் ஏஇஎல்லிடமிருந்து அவரின் இளைய சகோதரா் ராஜேஷ் ரூ.8.37 கோடியும் அவரின் உறவினா் பிரணவ் அதானி ரூ.6.46 கோடியும் சம்பளம் பெறுகின்றனா். இவா்கள் மூவரும் அதானி குழுமத்தின்கீழ் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து மட்டுமே சம்பளம் பெறுகின்றனா்.

ஏஇஎல் இயக்குநா் வினய் பிரகாஷ் ரூ.89.37 கோடியும் அதானி கிரீன் எனா்ஜி நிறுவனத்தின் சிஇஓ வினித் எஸ் ஜெயின் ரூ.15.25 கோடியும் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

SCROLL FOR NEXT