வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜூன் 24) சென்சென்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிந்துள்ளன.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்ந்து 77,341.08 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.17 சதவிகிதம் உயர்வாகும்.
காலை முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை சென்செக்ஸ் 77,423.02 என்ற உச்சத்தை அடைந்து பின்னர் சரியத் தொடங்கியது. 76,745 புள்ளிகள் என்ற அளவில் சரிவை சந்தித்து பின்னர் 77,341.08 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 23,537.85 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.16 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக அல்ட்ராடெக், எம்&எம், நெஸ்ட்லே இந்தியா, சன் பார்மா, டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ வங்கி, பஜாக் பின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
எஞ்சிய 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. இதில் பஜாஜ் ஃபைனான்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், மாருது சுசூகி, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.