வணிகம்

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவு!

DIN

வாரத்தில் முதல் வணிக நாளான இன்று சென்சென்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிந்துள்ளன.

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.99 புள்ளிகள் உயர்ந்து 72,748.42 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.14 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32 புள்ளிகள் உயர்ந்து 22,055 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.15 சதவிகிதம் உயர்வாகும்.

பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. அதிகபட்சமாக இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, விப்ரோ, என்யுஎல், நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

இதேபோன்று, அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 5.68 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக எம்&எம் 3.04 சதவிகிதமும், ஜேஎஸ்டபில்யூ ஸ்டீல் 2.97 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் 2.74 சதவிகிதமும், சன் பார்மா 1.47 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT