முகப்பு
வணிகம்

ரூ. 50,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது.

Updated On : 21 மார்ச் 2024, 9:41 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.49,880-க்கு வியாழக்கிழமை விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரு கிராம் ரூ. 6,140-க்கும், ஒரு சவரன் ரூ.49,120-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760-ம், கிராமுக்கு ரூ.95-ம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.49,880-க்கும், ஒரு கிராம் ரூ.6,235-க்கும் விற்பனையாகிறது.

விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ. 50,000-ஐ எட்டவுள்ளதாக் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.81.50-க்கும், ஒரு கிலோ ரூ. 81,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments