வணிகம்

ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி!

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.28 ஆக வர்த்தகமான நிலையில், வர்த்தக முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 35 காசுகள் குறைந்து ரூ.83.48 ஆக ஆக நிறைவடைந்தது. முன்னதாக டிசம்பர் 13, 2023 அன்று ரூபாய் மதிப்பு அதன் மிகக் குறைந்த அளவு 83.40 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வர்த்தகம் தொடங்கியபோது சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் குறியீட்டு எண்கள், இறுதியில் உயர்ந்து முடிந்துள்ளது. அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்து 72,832 புள்ளிகளானது. மாருதி சுசூகி 3.5%, சன் ஃபார்மா 7.7%, டைட்டன் 2%, ஐடிசி இண்டஸ் இண்ட் வங்கி பங்கு தலா 1.7% விலை உயர்ந்தன.

மேலும் எல்அண்ட்டி, டாடா மோட்டார்ஸ், பார்த்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் பங்குகள் ஒரு சதவீதத்துக்கு மேல் விலை உயர்ந்து வர்த்தகமாயின. இன்போசிஸ் பங்கி 2.9%, விப்ரோ பங்கு 2.7%, எச்சிஎல். டெக் பங்கு 2.4%, டிசிஎஸ் பங்கு 1.5% விலை குறைந்து விற்பனையானது. அதேவேளை தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 பங்குகள் உயர்ந்து 22,097 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலீஸாரை தடுத்தி நிறுத்தி கிராம மக்கள் மறியல்

சங்கராபுரம், சின்னசேலத்தில் பலத்த மழை

முன்விரோதத்தில் ஒருவா் வெட்டிக் கொலை

கல்லை தமிழ்ச் சங்க தொடா் சொற்பொழிவு

ஞானதேசிகா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT