பல்சரை அறிமுகப்படுத்தும் நிறுவனத்தினர் ஐஏஎன்எஸ்
வணிகம்

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

பஜாஜின் புதிய பல்சர் என்எஸ்400ஸி அறிமுகம்

DIN

இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் புதிய ‘பல்சர் என்எஸ்400ஸி’ என்கிற மாடலை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த பல்சர் இதுவரை வெளிவந்த மாடல்களிலேயே அதிக சிசி கொண்ட வாகனமாக உள்ளது.

373 சிசி ஆற்றல் கொண்ட இந்த பல்சர், 6 வேக மாற்றிகள் (கியர்), 40 பிஎஸ் ஆற்றல் மற்றும் 35 என்எம் டார்க் திறன் கொண்டுள்ளது.

வடிவமைப்பில் புதிதாக முன்பக்க விளக்கு, டயர் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனத்தின் மேல் பகுதியில் வேகமானிக்கு எண்மதிரை பொருத்தப்பட்டுள்ளது. அதில் செல்போனை இணைத்துக் கொள்ளும் ப்ளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.1,85,000/- (எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT