வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச் சந்தை முடிவில் 73,961.31 புள்ளிகள் என்ற நிலையில் நிலைபெற்றது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 75.71 புள்ளிகள் உயர்ந்து 73,961.31 புள்ளிகளில் நிலைபெற்ற நிலையில், இது அதிகபட்சமாக 74,478.89 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 73,765.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 42.05 புள்ளிகள் உயர்ந்து 22,530.70 புள்ளிகளில் நிலைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக அதிக ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் இன்று வரையிலான ஐந்து நாட்களில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது வர்த்தகமானது.
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு வர உள்ள நிலையில், அனைவரின் பார்வை அடுத்த கட்ட நடவடிக்கையாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்ச வாக்குப்பதிவு மற்றும் தற்போதைய நிலையில், வலுவான எதிர்ப்பு அலை ஆகியவற்றால் முதலீட்டாளர்களை எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என்று ஜியோஜித் நிதி சேவைகளின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.
டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட், இண்டஸ்இண்ட் வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. நெஸ்லே இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி சுசூகி இந்தியா, இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை சரிவைச் சந்தித்து.
ப்ளூ ஸ்டார், கோரமண்டல் இன்டர்நேஷனல், இமாமி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் பார்மாசூட்டிகல்ஸ், கோதாவரி பவர், ஜே குமார் இன்ஃப்ரா, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், ஜூபிடர் வேகன்ஸ், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், ஓபராய் ரியால்டி, டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட 30 பங்குகள் பிஎஸ்இ-யின் 52 வார உச்சத்தைத் தொட்டன.
பலவீனமான வர்த்தகத்தினால் ஆசிய சந்தைகள், ஷாங்காய், டோக்கியோ, சியோல் மற்றும் ஹாங்காங் ஆகியவை ஏற்ற-இறக்கத்தில் முடிந்தது. அதே வேளையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாயின.
உலகளாவிய பிரெண்ட் கச்சா 0.40 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 81.53 என்று அமெரிக்க டாலராக வர்த்தகமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.