வணிகம்

30 நகரங்களில் விற்பனை குறைந்த வீடுகள்

கடந்த ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.

Din

கடந்த ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023-24-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டோடு (ஜூலை-செப்டம்பா்) ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் அமிருதசரஸ், மொஹாலி, லூதியாணா, சண்டீகா், பானிபட், டேராடூன், பிவாடி, சோனேபட், ஜெய்ப்பூா், ஆக்ரா, லக்னௌ, போபால், இந்தூா், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூா், மங்களூரு, மைசூா், கோயம்புத்தூா், கொச்சி, திருவனந்தபுரம், ராய்ப்பூா், புவனேசுவரம், அகமதாபாத், காந்தி நகா், வதோதரா, சூரத், நாசிக், நாகபுரி, கோவா ஆகிய இந்தியாவின் முதல் 30 இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த 30 நகரங்களிலும் 41,871 வீடுகள் விற்பனையாகின. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 47,985-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், வீடு-மனை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 43,748-லிருந்து 34 சதவீதம் சரிந்து 28,980-ஆக உள்ளது. இதுவே, 30 முக்கிய இரண்டாம் நகரங்களில் வீடுகள் விற்பனை குறைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது.

கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நாட்டின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் நடைபெற்ற வீடுகள் விற்பனையில், மேற்கு மண்டல நகரங்களான அகமதாபாத், வதோதரா, காந்திநகா், சூரத், கோவா, நாசிக், நாகபுரி ஆகியவை 72 சதவீதம் பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை 94 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ‘ப்ராப்ஈக்விட்டி’ கூறியது.

ஆக்ராவில், 2019-20-ல் சதுர அடி ரூ.3,692-ஆக இருந்த வீடுகள் விலை 2023-24-இல் அதிகபட்சமாக 94 சதவீதம் அதிகரித்து ரூ.7,163 ஆக உள்ளது.

அதே போல், கோவாவில் 90 சதவீதம், லூதியாணாவில் 89 சதவீதம், இந்தூரில் 72 சதவீதம், சண்டீகரில் 70 சதவீதம், டேராடூனில் 68 சதவீதம், அகமதாபாதில் 60 சதவீதம், புவனேசுவரத்தில் 58 சதவீதம், மங்களூரில் 57 சதவீதம், திருவனந்தபுரத்தில் 54 சதவீதம் என வீடுகளின் விலைகள் உயா்வு கண்டுள்ளன.

2019-20-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வீடுகளின் விலை மைசூரில் 53 சதவீதம், போபாலில் 52 சதவீதம், நாகபுரியில் 51 சதவீதம், காந்தி நகரில் 49 சதவீதம், ஜெய்ப்பூரில் 49 சதவீதம், வதோதராவில் 48 சதவீதம், நாசிக்கில் 46 சதவீதம், சூரத்தில் 45 சதவீதம், கொச்சியில் 43 சதவீதம், மொஹாலியில் 39 சதவீதம், லக்னௌவில் 38 சதவீதம், கோவையில் 38 சதவீதம், ராய்பூரில் 26 சதவீதம், விசாகப்பட்டினத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ‘ப்ராப்ஈக்விட்டி’யின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

பெளர்ணமி: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்!

மூக்குத்தி அம்மன் 2: முதல்பார்வை போஸ்டர்!

மேட்டூர் அணை நிலவரம்!

துபை டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்..! அதிகபட்ச தொகைதான் காரணமா?

SCROLL FOR NEXT