சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! மீடியா, எண்ணெய் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி!
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது.
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (அக். 4) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது.
சென்செக்ஸ் 800 புள்ளிகளும் நிப்டி 337 புள்ளிகளும் சரிவுடன் தொடங்கியது.
நண்பகல் 12 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 1,342.23 புள்ளிகள் சரிந்து 78,381.88 புள்ளிகளாக வணிகம் இருந்தது. மொத்த வணிகத்தில் இது 1.47 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 451.55 புள்ளிகள் சரிந்து 23,852.80 புள்ளிகளாக இருந்தது. இது மொத்த வணிகத்தில் 1.58 சதவீதம் சரிவாகும்.
3 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வு
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எம்&எம், டெக் மஹிந்திரா, இந்தஸ்இந்த் வங்கி ஆகிய மூன்று நிறுவனங்கள் உயர்வுடன் காணப்பட்டன.
எஞ்சிய 27 நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருந்தன. அதிகபட்சமாக சர்பார்மா நிறுவனத்தின் பம்ங்குகள் -3.89% சரிந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக என்டிபிசி -3.81%, ரிலையன்ஸ் -3.43%, அதானி போர்ட்ஸ் -3.23%, பவர் கிரிட் -2.81%, டாடா மோட்டார்ஸ் -2.64%, பஜாஜ் ஃபின்சர்வ் -2.25% சரிவுடன் காணப்பட்டன.
நிஃப்டி நிலவரம்
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 23 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. 10 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 23,948.95 புள்ளிகளாகச் சரிந்தது. 12 மணி நிலவரப்படி 23,852.80 புள்ளிகள் வரை சரிந்தது.
நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் ஜில்லட் இந்தியா, வி-கார்ட், சன்பார்மா ஃபைனான்ஸ், மதர்சன் வையரிங் இந்தியா, சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
பங்குச் சந்தையில் பெரும்பாலான துறைகள் வீழ்ச்சியுடன் வணிகத்தைத் தொடங்கின. குறிப்பாக மீடியா, இரும்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, பவர் மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் 2 - 3 சதவீதம் சரிந்திருந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்குவதையொட்டி பங்குகளை வாங்க முதலீட்டாளர்களிடையே நிலவும் நம்பிக்கையற்ற சூழலே பங்குச் சந்தை சரிய காரணமாக பார்க்கப்படுகிறது.