சரிந்து மீண்ட பங்குச்சந்தை! சென்செக்ஸ் 55 புள்ளிகள் வீழ்ச்சி!
வாரத்தின் கடைசி வணிக நாளான இன்று(நவ. 8) ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை சரிந்து பின்னர் மீண்டது.
வாரத்தின் கடைசி வணிக நாளான இன்று(நவ. 8) ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை சரிந்து பின்னர் மீண்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,611.90 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில், 55.47 புள்ளிகள் குறைந்து 79,486.32 புள்ளிகளில் நிறைவுற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 51.15 புள்ளிகள் சரிந்து 24,148.20 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் முடிவுற்றது.
இதையும் படிக்க | பணமதிப்பிழப்பு: இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு!
எம்&எம், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், டைட்டன், சன்பார்மா, ஐடிசி, எல்&டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.