கோப்புப் படம் 
வணிகம்

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி 8% அதிகரிப்பு!

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.8 சதவிகிதம் அதிகரித்து 14.06 கோடி டன்னாக உள்ளது.

DIN

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.8 சதவிகிதம் அதிகரித்து 14.06 கோடி டன்னாக இருந்தது.

பி2பி இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்ஷன் சர்வீசஸ் லிமிடெட் தொகுத்த தரவுகளின்படி, நாட்டின் நிலக்கரி இறக்குமதி முந்தைய ஆண்டு 13.034 கோடி டன்னாக இருந்தது.

இருப்பு நிலை மற்றும் உள்நாட்டு சந்தையில் ஸ்பாட் ஏலங்கள் மூலம் நிலக்கரி கையிருப்பு வைத்திருப்பதால் அதன் இறக்குமதி தேவை மிதமானதாக இருக்கும் என்றார் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான வினயா வர்மா.

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 10.09 சதவிகிதம் குறைந்து 2.16 கோடி டன்னிலிருந்து 1.942 கோடி டன்னாக இருந்தது.

செப்டம்பர் மாதத்தில் மொத்த இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி அளவு 1.324 கோடி டன்னாக இருந்தது. இதுவே முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1.488 கோடி டன்னாக இருந்தது. அதே வேளையில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு 0.459 கோடி டன்னிலிருந்து 0.339 கோடி டன்னாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 9.192 கோடி டன்னாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 8.345 கோடி டன்னை விட இது அதிகமாகும்.

பண்டிகை காலத்திற்கு முன்னதாக, செப்டம்பரில் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி சிறிதாக அதிகரித்தது. இருப்பினும், எஃகு தேவை மற்றும் விலையில் ஏற்பட்ட மந்தநிலைக்கு ஏற்ப கோக்கிங் நிலக்கரி இறக்குமதி வீழ்ச்சியடைந்தது என்றார் வர்மா.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக கோல் இந்தியா பங்கு வகிக்கிற நிலையில், நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்க விநியோகத்தை அதிகரிக்கவும் கோல் இந்தியாவின் முன்னுரிமைகள் இருக்க வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

எஸ்.ஐ.ஆரில் குளறுபடி; பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம்! - திமுக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

முதல் 100 செயலிகளின் பட்டியலில் எங்கே போனது ஸோஹோவின் அரட்டை?

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT