Natco Pharma 
வணிகம்

நாட்கோ பார்மா நிகர லாபம் 83% உயர்வு!

நாட்கோ பார்மா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், செப்டம்பர் 2024 காலாண்டில், 83 சதவிகிதம் அதிகரித்து, ரூ.676 கோடியாக அதிகரிப்பு.

DIN

புதுதில்லி: நாட்கோ பார்மா நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் 2024 காலாண்டில், 83 சதவிகிதம் அதிகரித்து, ரூ.676 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்கோ பார்மா ரூ.369 கோடி நிகர லாபம் ஈட்டியது.

இதையும் படிக்க: சென்செக்ஸ் 821 புள்ளிகளுடனும், நிஃப்டி 258 புள்ளிகள் சரிந்து முடிவு!

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

எங்களது வருவாய் ரூ.1,031 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,371 கோடியானது. அதே வேளையில் ஏற்றுமதி முறை வணிகம் மற்றும் நிலையான உள்நாட்டு வணிகம் ஆகியவற்றால் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளது.

2024-25 நிதியாண்டில் அதன் இயக்குநர் குழு 2-வது இடைக்கால ஈவுத்தொகையாக தலா ரூ.2 ஈக்விட்டி பங்குக்கு ரூ.1.5 அறிவித்துள்ளது.

நாட்கோ பார்மா நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இயில் 0.19 சதவிகிதம் குறைந்து ரூ.1,393.15 ஆக முடிவுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT