முகப்பு
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு: 10 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 6வது நாளாகச் சரிவுடன் முடிந்தது.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:00 AM
கோப்புப் படம்
பகிர்:

இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 6வது நாளாகச் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகளும் நிஃப்டி 26 புள்ளிகளும் சரிந்தன.

சென்செக்ஸ் பட்டியலி உள்ள 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. மீடியா, ரியாலிட்டி, துறை பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன.

மற்ற 5 நாள்களுடன் ஒப்பிடும்போது இன்றைய சரிவு முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மாற்றமின்றி தொடக்கம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 110.64 புள்ளிகள் சரிந்து 77,580.31 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.14 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26.35 புள்ளிகள் சரிந்து 23,532.70 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.11 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸ் எந்தவித மாற்றமுமின்றி இன்று தொடங்கியது. 77,636.94 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் 78,055.52 புள்ளிகள் வரை உயர்ந்தது. இது இன்றைய அதிகபட்ச உயர்வாகும். இதேபோன்று 77,424.81 என்ற அதிகபட்ச சரிவையும் இன்று சந்தித்தது.

வணிக நேர முடிவில் 110 சரிந்து 77,580 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

10 நிறுவனப் பங்குகள் உயர்வு

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.25% உயர்வுடன் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக கோட்டாக் வங்கி 1.19%, டெக் மஹிந்திரா 0.72%, எச்.டி.எஃப்.சி. வங்கி 0.68%, ஏசியன் பெயின்ட்ஸ் 0.52%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 0.34%, எம்&எம் 0.30%, ஐசிஐசிஐ வங்கி 0.26%, ஆக்சிஸ் வங்கி 0.14%, பார்தி ஏர்டெல் 0.01% உயர்ந்திருந்தன.

இதேபோன்று அதிகபட்சமாக ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் பங்குகள் -3.08% சரிந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக நெஸ்ட்லே இந்தியா -2.35%, என்.டி.பி.சி. -2.33%, இந்தஸ்இந்த் வங்கி -1.89%, பவர் கிரிட் -1.86%, அதானி போர்ட்ஸ் -1.82%, டாடா மோட்டார்ஸ் -1.52% சரிவுடன் இருந்தன.

நிஃப்டி நிலவரம்

வணிக நேரத் தொடக்கத்தில் 23,542.15 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, 23,675.90 வரை இன்றைய உச்சத்தைப் பதிவு செய்தது. அதன் பிறகு தொடர்ந்து சரிந்து, வணிக நேர முடிவில் 26 புள்ளிகள் சரிந்து 23,532 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் நெட்வொர்க் 18 மீடியா பங்குகள் 8.79% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக எய்ச்சர் 6.43%, ஜியோ ஃபினான்சியல், ஜோதி சி.என்.சி. 6.16%, தீபக் நைட்ரேட் 5.82%, பாலிசி பஸார் 5.62% உயர்ந்திருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →