'சொமேட்டோ' 
வணிகம்

ரூ.8,500 கோடி நிதி திரட்டிய சொமேட்டோ!

உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' ஈக்விட்டி பங்குகளை, தனிப்பட்ட முறையில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு, விற்பனை செய்ததன் மூலம் ரூ.8,500 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' ஈக்விட்டி பங்குகளை, தனிப்பட்ட முறையில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு, விற்பனை செய்ததன் மூலம் ரூ.8,500 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட நிதி திரட்டல் மூலம் அதன் இருப்புநிலைக் வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார் ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தீபிந்தர் கோயல்.

இதையும் படிக்க: வங்கக்கடலில் உருவானது ஃபென்ஜால் புயல்!

தனது ஒழுங்குமுறை தாக்கலில் ஒன்றில், வாரியத்தின் நிதி திரட்டும் குழு மூலம் நிறுவனம் 33,64,73,755 (33.65 கோடி) பங்குகளை தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு, தலா ஒரு பங்கின் விலை ரூ.252.62 என்று நிர்ணயித்து ஒப்புதல் அளித்தது, மொத்தம் ரூ .8,500 கோடி திரட்டியது.

சொமேட்டோவின் பங்கு ஒன்றுக்கு ரூ.265.91 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்களுக்கு அடிப்படை விலையிலிருந்து 5 சதவிகிதம் தள்ளுபடியில் ஒதுக்கப்பட்டன.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையில் -2.32% குறைந்து ஒரு பங்கின் விலை ரூ.279.45 ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதேசி கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி: பிரதமர் மோடி அஞ்சலி!

பங்குச்சந்தை: 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்; ஐடி, உலோகப் பங்குகள் சரிவு!!

தேசியவாத காங்கிரஸை ஒன்றிணைக்க அஜீத் பவார் விருப்பம்?

பி.டி. உஷா கணவர் சீனிவாசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மீண்டும் மீண்டுமா? கருக்கு முக்கிய சாலையில் ராட்சத பள்ளம்! தீர்வுடன் மாற்றும் தேவை!

SCROLL FOR NEXT